சின்ன வயதில் கொஞ்சம் கட்டுப்பெட்டியாகத்தான் வளர்த்தார்கள். நகராட்சி நடு நிலைப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்த பொழுது, டீச்சர்கள் எல்லாம் போதிதர்மர்களாகத்தான் இருந்தார்கள். ஒரு பொய்? கபடம்? ம்ஹ்ம்..
.டீச்சர் இவன் என் பென்சிலை திருடுறான்...
திருடியவனுக்கு அதிக பட்ச தண்டனை கிடைத்தது. அந்த சத்திய காலத்தில், டீச்சர்களுக்கு அதிக சலுகை இருந்தது.
வீட்டில் தினமும் ராமாயணக் கதைகள் சொல்லுவார்கள். எந்த விதத்திலும் கெட்ட விஷயங்கள் காதில் விழக் கூடாது என்ற பிடிவாதம் ஒட்டு மொத்தமாய், பள்ளியிலும், வீட்டிலும் இருந்தது.
பாட்டி அவ்வப்பொழுது, நேர்மை என்றால் என்ன? சங்கர சுப்பு என்பாள்.
கதை பேரே இவ்வளவு நீளமா
கதை பேரு நேர்மை என்றால் என்ன...எழுதியவர் பெயர் சங்கர சுப்பு
பாட்டி விடாமுயற்சியாக எங்களை நல்ல குடிமக்கள் ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த வேளையில், எங்களின் நேர்மைக்கு ஒரு சோதனை வந்தது.
காலையில் வழக்கம் போல, மேரே தோஸ்தி என்று விஷால் வீட்டில் பார்த்த ஹிந்தி படத்தின் பாடலை அர்த்தம் புரியாமல் பாடிக்கொண்டே சம்ஸ்க்ருத க்ளாஸ் செல்லும் போது, வழியில் ஐம்பது ரூபாய் இருந்தது.
அன்றைய ஐம்பது ரூபாய்....மிகப் பெரிரிரியது....
ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாயில் இருந்த காலம். நாங்கள் எடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்கி நின்றோம். நாங்கள் என்றால், நானும் என் தம்பியும்.
அவன் எடுக்கலாம் என்றான். எனக்கு பள்ளியில் சொன்ன நீதி ஞாபகத்திற்கு வந்தது.
தனக்கு சம்மந்தம் இல்லாத பொருளை, எடுக்க கூடாது...உரியவர்களிடம் கொடுத்து விட வேண்டும்...
ஆனால், இந்த பணத்திற்கு உரியவர் யார் என்று தெரியவில்லை. ஒரு வேளை , அவர் வருவாரா? தேடுவாரா?
இந்த மாதிரி ஆத்ம விசாரணையில் நாங்கள் இருந்த பொழுது, மீசையோடு ஒருவர் எங்கிருந்தோ சைக்கிளில் வந்தார்.
என்ன தம்பி பார்க்குறீங்க
கீழே ஒரு ஐம்பது ரூபாய் நோட்டு இருக்கு
அடடே ஆமாம் ...உங்களுதா
இல்லன்னா....யாருதுன்னு தெரியல...அதுதான்
உங்களுது இல்லேதானே....நீங்க போங்க...நான் கொடுத்துடறேன்...
கொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி பார்த்ததில், அவர் அப்பட்டமாக அந்த பணத்தை, சட்டைக்குள் செலுத்திக் கொண்டதை பார்த்தோம்.
நாங்கள் அவர் மீசையை பார்த்த அதிர்ச்சியில் சம்ஸ்க்ருத க்ளாஸ்ஸிற்கு சென்றோம்.
க்ளாஸ் முடிந்து வரும் வழியில் எனக்கு சந்தேகமாகவே
இருந்தது. ஒரு வேளை அந்த பணத்தை நாமே எடுத்திருக்க வேண்டுமோ? பணத்தை எப்படி அந்த மீசைக்காரர் உரியவரிடம் சேர்ப்பார்?
வீடு திரும்பியதும் பாட்டியிடம் கேட்டேன்...
பாட்டி, இன்னிக்கு ஒரு விஷயம் நடந்தது
என்ன
ரோட்டில் போகும் போது, கீழே ஒரு ஐம்பது ரூபா நோட்டு இருந்தது
அடடே, அப்புறம்
யாருதுன்னு தெரியல...அதனால, அதை அங்கேயே விட்டுட்டு வந்துட்டோம்....அதுக்குள்ள ஒரு ஆளு வந்து எடுத்துட்டு போயிட்டாரு
நீ ஏன் அப்படி பண்ணே? பேசாம எடுத்துண்டு வந்திருக்கலாம் இல்லை?
பிற்பாடு வளர்ந்த பின், சமூகத்தோடு நேரடியாக தொடர்பு கொண்ட பிறகு, ஏற்பட்ட பல்வேறு ஏமாற்றங்களுக்கும் , அதிர்ச்சிகளுக்கும் என்னை தயார்படுத்த பாட்டியின் கேள்வி உதவியது.

No comments:
Post a Comment