பதினைந்து வயது வரை ஆன்மீகம் என்றால் சங்கர மடம் மட்டும்தான் ஞாபகத்திற்கு வரும். பூணூல் பண்டிகை என்று மற்றவர்கள் அழைக்கும் ஆவணி அவிட்டம் தாண்டி, பல்வேறு பண்டிகைகள் மட்டுமே நினைவிற்கு வரும். எத்தனையோ பண்டிகைகள். வரலக்ஷ்மி நோன்பு,காரடையான் நோன்பு, நவராத்திரி கொலு, பீஷ்ம ரத சாந்தி. பெரும்பாலும் எல்லாம் பெண்களின் பண்டிகைகள். மினிமம் ஒரு பாயசமும், வடையும், அவியலும் உண்டு.
என் ஆன்மீக அனுபவம் எல்லாமே, பண்டிகைகள் சார்ந்ததே. எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு, ஸ்பீக்கரில் வீரமணி பாட்டு, எல் ஆர் ஈஸ்வரி பாட்டு வைப்பார்கள். கடைசி நாளன்று வெண் திரையில், ஆயிரத்தில் ஒருவன்.
எல்லா பரிட்சைக்கு முன்னும் எதற்கும் இருக்கட்டும் என்று பிள்ளையார் கோவில் சென்று வருவேன். பரீட்சையை பிள்ளையார் சமாளித்து விடுவார் என்று.
பெரியாரா? நாத்திகமா? மூச்...என் காதில் விழுந்ததே இல்லை. இப்படி போய்க் கொண்டிருந்த நாட்களில், நான் ஒருவரை சந்தித்தேன். ரமேஷ் என்று பெயர். என் நண்பரின் நண்பர். என்னை விட இரண்டு வயது மூத்தவர்.
அவர்தான் என்னை ராமச்சந்திரா மிஷனிற்கு அழைத்து சென்றார். வலசையூர் தாண்டி ஆசிரமம் .இருந்தது. காலையில் எல்லாரும் த்யானம் செய்தார்கள். நான் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். குரு மாதிரி இருந்தவர், மேடையில் பேசினார். எல்லாரும் கைதட்டினார்கள். மதியம் சாப்பாட்டிற்கு வரிசையில் நின்று சாப்பிட்டேன்.
மதியம் இருங்கள், இன்னொரு குரு பேசுகிறார் என்றார்கள்.
நான் யாரிடமும் சொல்லாமல் வாசலில் இருந்த சைக்கிளை மிதித்து, வீட்டிற்கு வந்து, கேப்டன் பிரபாகரன் பார்க்க தொடங்கினேன். இதுதான் என் முதல் ஆன்மீக அனுபவம்.

No comments:
Post a Comment