Thursday, June 9, 2016

தமிழும் நானும்

பள்ளிப் படிப்பு வரை தமிழ் மீடியம்தான். ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்து புத்தகங்கள் அனைத்தும், தமிழில் தான்  இருக்கும்.கோனார் தமிழ் உரையும், வெற்றி அறிவியல் உரையும் அப்போதும் இருந்தது. தமிழ் வகுப்பில், ஆங்கிலத்தை வெறுக்கவும், ஆங்கில வகுப்பில் தமிழை வெறுக்கவும் ஆசிரியர்கள் சொல்லித் தந்தார்கள். மற்ற பாடங்களை, வீம்புக்காகவும், கட்டாயத்தினாலும் படித்த எனக்கு, தமிழ் மட்டுமே, (இங்கே அடிக்கோடிட வேண்டும்) இயல்பாக பிடித்தது. பாட்டியின் தமிழ் ஆர்வமும் என் ஜீனில் ஒட்டிக் கொண்டது. என் குடும்பம்தான், எனக்கு கல்கியையும், சுஜாதாவையும் அறிமுகப் படுத்தியது. அதற்கு பிறகு, நானே கொஞ்சம் முனைந்து, மற்றவர்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். ஆதவன், பிரபஞ்சன், சிவசங்கரி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் பழக்கமானார்கள். தொழில் பெங்களூரில் இருந்தாலும், வாரக் கடைசியில், என்னால் தமிழ் ஆர்வலனாய், ஓசூரில் வாழ முடிந்தது. ஓசூர் நூலகத்தில், நிறைய நல்ல புத்தகங்கள் கிடைத்தன. இன்றைய உலக தாராளமய பொருளாதாரத்திலும், என்னை இலக்கியம் பக்கம் இழுத்த, அனைத்து எழுத்தாளர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.





No comments:

Post a Comment