ராகவனுக்கு
நெற்றிப் பொட்டில் சுரீரென்று வலித்தது. அது கோபம் வருவதற்கான
அறிகுறி. அவன்
மனைவியால் மட்டுமே, புரிந்து கொள்ளக்கூடிய உணர்வு.
எதிரே இருந்த ரிதேந்திராவை மேஜையில்
இருந்த பேப்பர் வெயிட்டால் அடிக்கலாம்
போல இருந்தது. ஆனால், இது அலுவலக
நடை முறைக்கு சாத்தியம் இல்லாதது. அவன் தனக்கு உயர்
அதிகாரி. சம்பளம் கொடுப்பவன்.
பொறுமை
இழந்து, முடிவாய் என்ன சொல்கீறீர்கள்? என்றான்.
“வேறு என்ன சொல்வது? நீங்கள்
இந்த முறையும் கோட் அடித்து விட்டீர்கள்”
நானா? என்றான். நிறைய சொல்ல வேண்டும்
போல இருந்தது. கோபத்தில் உஷ்ணக்காற்று மட்டுமே வந்தது. மெதுவான குரலில் சொன்னான்.
நீங்கள்
என்னைப் பற்றி சரியாக புரிந்து
கொள்ளவில்லை. ஜேச்க்ரிப்ட்டிலிருந்து, ஸீ க்யு எல்
வரை எல்லாம் எடுத்தாகி விட்டது.
பசங்கள் எல்லாம்
தண்டம். அவனவன், பெண்களின் மார்பையே
பார்த்துக் கொண்டிருக்கிறான்
அது நமக்கு அவுட் ஆப்
ஸ்கோப். நமக்கு தேவை பீட்பக்.
நற்சான்றிதழ். பையன் குடும்பம் நடத்தி,
சீமந்தம் செய்தாலும், நமக்கு கவலை இல்லை. நம்முடைய
இலக்கு நான்கிற்கு மேல். இல்லாவிடில், முப்பது
பெர்செண்ட் கட்...உங்களுக்கு நான்
சொல்லவேண்டியது இல்லை....நீங்கள் சீனியர்..
எதிக்ஸ்
அல்லது நீதிநெறி பற்றி
ஏதாவது தெரியுமா? என்று கேட்க நினைத்தான்.
நீங்களெல்லாம்
தொண்ணூறுக்கு அப்புறம் பிறந்தவர்கள். கூகிள் வாசிகள். எல்லாம்
கார்பன் காபி கேசுகள். காலையில்
முளைத்த காளான்கள்.
எதுவும்
சொல்லமுடியவில்லை.
ராகவனுக்கு
நாற்பத்தி மூன்று வயது ஆகிறது.
வீடு
மாம்பாக்கம். உங்களுக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தாம்பரத்திலிருந்து பள்ளிக்கரணை செல்லும் பாதையில், சேலையூர் தாண்டி, ராஜ கீழ்ப்பாக்கம்
முனையில் திரும்பினால், உள்ளே ஐந்து கிலோ
மீட்டர் தாண்டி, எம் ஜி
ஆர் நகரில், ராஜாஜி தெருவில்
வீடு. சென்னையிலிருந்து தூரம். அங்குதான் சல்லிசாக
வீடு கிடைத்தது.
தினமும்
ஒ எம் ஆருக்கோ,
படப்பைக்கோ, ஸ்ரீபெரும்புதூருக்கோ ட்ரெயினிலும், பஸ்சிலோ செல்வான். இங்குதான்
நகரின் பெரும்பாலான ஐ டி கம்பெனிகள்
இருக்கின்றன. ராகவனுக்கு ரிதேந்திராவிடம் இருந்து குறிப்பு வரும்.
வாட்ஸ் அப்பில் முகவரி வரும்.
செல்வான்.
அங்கு நாற்பது பேர் அவனுக்காக
காத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இந்தியாவின் தலைசிறந்த
காலேஜில் இருந்து, பிளேஸ்மேண்டில் வேலை கிடைத்து, புதிதாய்
வேலைக்கு வந்த இளம் என்ஜினியர்கள்.
இதில் கம்ப்யூட்டர் தெரிந்தவர்களும் இருப்பார்கள். தெரியாதவர்களும் இருப்பார்கள்.
ஒரு மாதக் காலத்தினுள் அவர்களை
தயாராக்கி, கம்பெனிக்குள் நேர்ந்து விட வேண்டும். அப்புறம்
மேனஜ்மென்ட் பார்த்துக் கொள்ளும்.
கன்யாகுமரியிலிருந்து,
காஷ்மீர் வரை இவர்களை வலை
வீசி பிடிக்க நிர்வாகம் காத்திருந்தது.
பாதி பேர் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பணம்
கட்டி படித்தவர்கள். நுனி நாக்கு இங்கிலீஷ்
பேசுபவர்கள். சகட்டு மேனிக்கு, கும்பலாய்,
ஆண்களும், பெண்களுமாய் சிகரட் பிடிப்பவர்கள். வெறும்
ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்கள். அறிவு
இல்லாதவர்கள்.
இவர்களுக்கு
வகுப்பு எடுப்பதை விட, பெரிய பாவம்
எதுவும் இல்லை என்று நினைத்துக்
கொள்வான்.
ஆனால்,
அவர்களிடம் ஒரு பலம் இருந்தது.
அதுதான் பீட்பேக். எப்படி ஒரு பொருள்
வாங்கியவுடன், அதன் தரத்தை, கேள்வி
பதில் கொடுத்து, ஒரு பார்மில் நிரப்ப
சொல்கிறார்களோ, அது போல இவன்
கொடுக்கின்ற பயிற்சியும் ஒரு சர்விஸ். எனவே,
வகுப்பில் படிப்பவர்கள் அனைவரும், பீட்பக் தரவேண்டும்.
அதில் நான்கிற்கு குறைந்தால், உடனே கஸ்டமர் முப்பது
சதவீதத்தை குறைத்து விடுவான். எனவே, வாலைச் சுருட்டிக்
கொண்டு, வேலை செய்ய வேண்டும்.
அதுதான்,
ராகவனுக்கு பிரச்சனை. ராகவனால் சில இங்கிதங்களைக் கடந்தால்
தாங்கிக் கொள்ளமுடியாது. பொங்கி விடுவான்
வகுப்புக்கு
தாமதமாய் வந்தால், உள்ளே ஒரு வார்த்தை
மன்னிப்பு கேட்டு வர வேண்டும்
என்று எதிர்பார்ப்பான். பெரும்பாலும் நடக்காது. அவனவன், சினிமா தியேட்டர்
இண்டர்வல் மாதிரி வருவான்.
கிளாஸ்
நடத்தும் போது , மொபைலில் கேம்
விளையாடினால், எப்படி இருக்கும்? ராகவனுக்கு
கேட்கிற அதிகாரம் கிடையாது.
அதுவும்
வடக்கு மாநிலமாக இருந்து விட்டால், கேட்கவே
வேண்டாம். எல்லாம் ஜோடி, ஜோடியாகத்தான்
சுற்றுவார்கள். எதுவும் கேட்க முடியாது.
இரண்டு முறை இந்த
மாதிரி அத்து மீறல்களுக்கு கத்தியதற்கு , கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல், பீட்பேக்கில்
புத்தியை காண்பித்து விட்டார்கள்.
ரிதேந்திரா
ஒரு முறை பார்த்து விட்டு
தொடர்ந்தார்.
" இங்கே
பாருங்கள் ராகவன்.....நான் ஒன்றும் மனசாட்சி
இல்லாதவன் கிடையாது. எனக்கு எல்லாம் தெரியும்.
என்ன செய்வது. இந்த ஜெனரேஷன் அப்படி.
பட், எனக்கும் சில சங்கடங்கள் இருக்கின்றன.
அடிக்கடி, பீட்பேக் குறைந்தால், கஸ்டமர் வேறு இன்னொருவரிடம்
தாவி விடுவான். ஸோ, நம் தரப்பில்,
என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். ஏதோ
ஒரு சல்யுஷன் இருக்கும்...உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா, சொல்லுங்க...இப்போதைக்கு, நாளைக்கு உங்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பு
தருகிறேன்...அது சரிப்பட்டு வரலேன்னா....லெட் அஸ் சீ"
ராகவன்
வெளியே வரும் பொழுது, மாலை
ஐந்து மணி. தலையை வலித்தது.
பையை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு கிளம்பினான்.
வரும் வழியில் ரிதேந்திராவிடம் இருந்து,
முகவரி வந்தது. என்ன இடம்?
வாட்ஸ் அப்பில் தெளிவாய், பெருங்குடி
என்றது.
பெருங்குடியில்
தெரிந்த இடம். ஏற்கனவே பல
முறை அவன் பழகிய இடம்.
ராகவன் ஒரு முடிவுடன் சென்றான்.
ரிதேந்திரா
கூப்பிட்டு வாழ்த்தினார்.
"வாவ்
ராகவ்.....இந்த முறை, உன்
பீட்பேக் எக்ஸ்செல்லேன்ட்...டூ யு க்நொவ்
ஹௌ மச்?"
"எவ்வளவு?"
"நாலு
புள்ளி எட்டு....கிளையன்ட் மிக குஷி ஆகி
விட்டான்....இன்னும் புனேல, டெல்லிக்கெல்லாம்,
உன்னையே அனுப்ப சொல்றான்.... யு
ஆர் ராக்கிங் மேன் " என்றான்..
"தேங்க்ஸ்"
"இத
எப்படி சாதிச்சே?"
"அவசியம்
சொல்லனுமா?"
"ஆமாம்....."
"இந்த
ட்ரெய்னிங்லேர்ந்து, ஹெச் ஆர் மேனேஜர்
ட்ரெய்னர் கிட்டயும், பசங்க எப்படி படிக்கிறாங்கன்னு
பீட்பேக் கேக்கிறாங்கன்னு சொன்னேன்"
"அப்படி
கேட்கறாங்களா??"
"இல்லை"
No comments:
Post a Comment