Friday, June 10, 2016

தமிழ் இலக்கியவாதிகள்

எனக்கு எழுத்தாளர்களை  சந்திக்கும்போதெல்லாம் வயிற்றில், பயத்தில் ஏதோ அமிலங்கள் சுரப்பது போல்  இருக்கும். இப்படித்தான் ஒரு எழுத்தாளரை முதன் முதலில் சந்தித்த பொழுது, அவர் என் முன் வைத்த கேள்வி என்னை திகைப்பபடைய வைத்தது.

"எழுத்தாளரையெல்லாம் ஏன் சந்திக்கணும்னு நினைக்கிறீங்க..."

என் அனுபவத்தில், நிறைய எழுத்தாளர்களின், எழுத்தும், நடைமுறையும் முரண்பாடாக தோன்றுகிறது. மிக மென்மையான  காதல் கதைகளை எழுதுபவர், முரடராகவும், நிறைய க்ரைம் எழுதுபவர்கள் சாதுவாகவும் இருப்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

எழுத்து வேறு தளம். அதில் நிறைய ஜோடனைகள் இருக்கின்றன. தொடர்ந்து வாசகர்களை தக்க வைத்து கொள்வதே பெரிய சவால்.

இந்த முரண்பாடுகள், முற்றிலும் இல்லாத மனிதராக இப்போதைக்கு என்னால் திரு வா மணிகண்டன் அவர்களை சொல்ல முடிகிறது.

அவர் எழுத்தும், சமூக உணர்வும், எளிமையும், என் பயத்தினை நிறைய குறைத்திருக்கிறது.

எழுத்தாளர்களை சந்திக்கும் முன் ஒரு முறை யோசியுங்கள். ஏமாற்றத்தை தவிர்க்க.

No comments:

Post a Comment