ரெண்டாயிரத்து எட்டில் ஒரு முறை எகிப்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. குறைந்த நாட்கள்தான். பயண செலவு, தங்கும் செலவு, உணவிற்கு எல்லாம் கம்பெனி பார்த்துக் கொண்டான். நான் பார்த்த முதல் அரேபிய நாடு அதுதான். . ஓட்டங்கங்களும், பாலைவனமும், ஷேக்குகளும் படங்களில் பார்ப்பதை விட பயமாகவே இருந்தது. எகிப்து விஞ்ஞான வளர்ச்சி அடையாத நாடு. யாருக்கும் மருந்துக்கு கூட, ஆங்கிலம் தெரியவில்லை. விமான நிலையத்தை விட்டு, வெளியே வந்ததும், சுற்றி இருந்த டேக்சி டிரைவர்களில் இருப்பதிலியே மிக அப்பாவி முகத்தை தேர்ந்தேடுத்து, வண்டியை விட சொன்னேன். அந்த பாலைவன நிலப்பரப்பில், இரண்டு மணி நேரப்பயணத்தில், கடைசியில் விடுதியை அடைந்தேன். நடுவில் ஒரு முறை வண்டியை நிறுத்தினான். கையில் நிறைய பணம் இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ என்றோ பயந்தேன்.
இந்தியா? என்றான்...
ஆமாம்
அமிதாப்?
ஆமாம் என்றேன்....
வண்டி சூடு ஆகி விட்டது. கொஞ்ச நேரம் கழித்து செல்லலாம் என்றான். அவ்வாறுதான் இருக்கும். அந்த சில நிமிஷங்களில், பூதாகரமாய் கற்பனை செய்து கொண்டேன். எங்கேயோ பெங்களுரிலிருந்து, இவ்வளவு தூரம் வந்து உதை வாங்க வேண்டுமா?
மீண்டும் அந்த கண்றாவியானப் பாடலைப் பாடிக்கொண்டு, என்னை சரியான இடத்தில் விட்டு சென்றான்.
அடுத்த நாள், துணைக்கு என் கம்பெனியின் சமையல் காரனையும் அழைத்து கொண்டேன். சையத் என்று பெயர். கிட்டத்தட்ட பொன்னம்பலம் உயரம். அரேபியக்காரன். இரண்டு மாத பழக்கத்தில், நான் தமிழில் ஏதாவது சொன்னால், அவன் அழகாய் அரேபிக்கில் பதில் சொல்வான். எங்களிடமிருந்து சாம்பார் வைக்க கற்றுக் கொண்டான். தினமும் அவன் மெனுதான். எனக்கு மட்டும், தயிர் சாதம் கட்டாயம் உண்டு.
பிரமிடு போகலாம் என்றேன்...
லாம் என்றான்
அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு, பிரமிட் இருந்த ஏரியாவில், ஒரு ஜப்பானிய குரூப் எதற்கோ, ஹுரெ ஹுரெ என்று ஆடிக்கொண்டிருந்தார்கள்.
கிட்டத்தட்ட அதல பாதாளத்திற்கு செங்குத்தாய் இறங்க வேண்டி இருந்தது. பாதியில் போகலாமா என்றேன். இருங்கள் கொஞ்ச நேரம்தான்....வந்தாகி விட்டது....என்றான்.
கடைசியில், பிரமிடின், கடைசி கட்டத்திற்கு வந்து விட்டோம். வாசலில் ஒருவன், காவலுக்கு இருந்தான். எங்களைப் பார்த்ததும், நோ கேமரா என்றான்.
நான் உள்ளே நுழைந்தேன். காவலாளி வந்து, ஒரு பவுண்டு கொடுங்கள். கேமிராவில் படம் எடுத்துக் கொள்ளலாம் என்றான். இப்போது ஒரு பவுண்டுக்கு மோகனமாய் சிரித்தான்.
என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்த்தேன். ஏதோ ஒரு சமாதி. யாருடையது என்றேன். நீளமாய் ஏதோ பெயர் சொன்னான்.
மீண்டும் கஷ்டப்பட்டு, மேலே வந்து விடுதிக்கு திரும்பும்பொழுது, சையத் தயிர் சாதம் செய்து வைத்திருந்தான்.

No comments:
Post a Comment