நிறைய பழைய தமிழ் சினிமாக்களில், வில்லனாக நாம் உணர்ந்த எம் ஆர் ராதா . சமீபத்தில், அவரைப் பற்றிய சில புத்தங்கங்கள் கிடைத்தன. சுவாரசியமானவை. அவரின் சிறைச்சாலை அனுபவங்களின் தொகுப்பு. யாரோ பேட்டிக் கண்டிருக்கிறார்கள். அவர் சொல்லும் கருத்தினில் நாம் உடன்பாடு கொள்கிறோமோ, இல்லையோ, அந்த நேர்மைக்கு நாம் கட்டாயம் தலை வணங்கவேண்டும். இரண்டாயிரத்து பதினாறிலும், இன்னும் திரைக்கூடத்தினுள் தம் அரசியல் தலைவனைத் தமிழன் தேடிக் கொண்டிருக்கிறான். நடிகர்ளுக்கு எத்தனை மரியாதை கொடுக்க வேண்டும் என்பதிலிருந்து, அரசியல் பித்தலாட்டம் வரை, அத்தனை நெஞ்சுரத்தோடு, வெளிப்படையாய் விமர்சனம் செய்ய ஒரு மனோபலம் வேண்டும். அதில் எம் ஆர் ராதா அவர்களுக்கு, எந்த குறைவும் இல்லை. டி வீ யில் ரத்தக் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சாந்தி முகூர்த்தத்திற்கு ப்ரோகிதர் நேரம் குறிப்பார். ராகு இத்தனாவது இடத்தில் இருக்கிறான், குரு மறைந்து விட்டான்...என்பார். எம் ஆர் ராதா நடுவில் புகுந்து, ஒரே வரியில், அந்த காட்சியை மாற்றி விடுவார். "ஒ ப்ளேநட்ஸ்....",
No comments:
Post a Comment