நான் முதன் முதலில் பெங்களூர் வந்தது தொண்ணூறுகளின் மத்தியில். அன்றைய பெங்களூர் கிட்டத்தட்ட மைசூர் அளவுக்குத்தான் சொல்ல முடியும். கோரமங்களா போன்ற பகுதிகள் நகரின் வெளிப்பகுதியில் இருந்தது. எலெக்ட்ரானிக்ஸ் சிடி அருகே சாயந்திரம் ஆறு மணிக்கு மேல், வெறும் இருட்டு. நடுங்கும் குளிரில், மீண்டும் சென்னைக்கு செல்லும் காலத்தை எதிர்நோக்கி வந்து செல்வோம். ஆயிரம் சொன்னாலும், தமிழ்நாடு தமிழ்நாடுதான் என்று கித்தாப்பு பேசிக் கொள்வோம். இன்றைய பெங்களூரின் வாகனங்களைப் போலவே, பெங்களூரின் எல்லையும், கண்டபடி விஸ்தரிக்கபட்டிருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் நிறைய ஹோட்டல்களும், வெளிச்சங்களும், நிறைய டேக்சிகளும், கிட்டத்தட்ட நகரின் மையத்தில் இருப்பது போன்று தோன்றுகிறது.
கிளையன்ட் ஒருவர் அழைத்தார் என்று, ஒரு பப்புக்கு செல்ல வேண்டியதாயிற்று. உள்ளே நுழைந்ததும், மெல்லிய இருட்டில், நிறைய பேர் தீர்த்தம் அருந்திக் கொண்டிருந்தார்கள். என்னை முதலில் தாக்கிய விஷயம். அதில் பலர் பெண்கள். அதுவும் பதினெட்டில் இருந்து, இருபத்தைந்து வயதிற்குள் இருப்பவர்கள். என்னதான் தயார் நிலையில் இருந்தாலும், உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. நான் அமர்ந்த இடத்தின் அருகே, ஒரு ஜோடி பிரிவுக்கு பின் இணைகிறார்கள் போல. அத்தனை சரசம். அந்த பெண்ணின் கை, தெரியாமல் பட்ட போது, சாரி ப்ரோ என்று வேலையைத் தொடர்ந்தாள். நல்ல வேளையாக, அவசரமாக உடனே கிளம்பி விட்டேன். ஓசூர் வண்டி ஏறி அமர்ந்ததும், இரவு நேரத் தூக்கத்துக்கு பயந்து, டிரைவர் எம் ஜி ஆர் பாட்டு சத்தமாக வைத்தார். கண் போன போக்கிலே கால் போகலாமா என்றது. ஓசூர் வந்ததும் ஏனோ நிம்மதியாக இருந்தது.

No comments:
Post a Comment