கதை அளவுக்கு எப்பொழுதும் கவிதை என்னை ஈர்த்ததில்லை. வைரமுத்து, வாலி போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்றாலும், அதற்கு முன்றைய காலங்களின் பாடல்களை அவ்வளவாக ரசித்ததில்லை. பழைய கருப்பு வெள்ளை படங்கள் என்றதும் உத்தரவாதமாக வேறு சேனலுக்கு சென்று விடுவேன். ஓரளவிற்கு, இருபதுகளின் மத்தியில் பழைய பாடல்களைக் கேட்க கற்றுக்கொண்டேன். அதுவும் இசையினால். எந்த வார்த்தையையும் கவனித்ததில்லை. கண்ணதாசன் அவர்களின் ஒரே வரி என்னை கட்டிப் போட்டது. அந்த வரியை அப்புறம் சொல்கிறேன். பழைய பாடல்களின் சொல்லாடல், அவ்வளவு எளிமையாக இப்போதெல்லாம் கிடைக்காது. எண்பதுகளில் வந்த பாடல்களில் கூட அத்தனை ஆழம் இல்லை. அந்த பாடல்களுக்கு அவ்வளவு உருகி இருக்கிறேன். பழைய பாடல்களை, கேலி செய்வதினால், அந்த பாடல்களுக்கோ, அதனை எழுதியவர்களுக்கோ எந்த நஷ்டமும் இல்லை. நஷ்டம் நமக்குத்தான். அந்த பாடல் வரிகள். வாழ்க்கைப் படகு படத்தில், சின்ன சின்ன கண்ணனுக்கு என்று பி பி ஸ்ரீநிவாஸ் பேஸ் வாய்சில் தொடங்கும் பாடலில், இரண்டாவது சரணத்தில், "ஒருவரின் துடிப்பினிலே வளர்வது கவிதையடா.....இருவரின் துடிப்பினிலே வளர்வது மழலையடா". நன்றாக யோசித்ததில், நஷ்டம் கண்ணதாசனுக்கு இல்லை என்று புரிகிறது.
No comments:
Post a Comment