பெங்களூர் சிறுகதைகள் என்கிற தலைப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள். சுஜாதா,பாவண்ணன், சுந்தரபாண்டியன், ரவிச்சந்திரன் போன்றவர்கள் எழுதியது. அத்தனை கதைகளிலும், பெங்களூர் முக்கிய கதாபாத்திரம். எல்லா கதைகளுமே, மிக நன்றாய் இருந்தன. பத்து வருடங்களாய் பெங்களூர் வாசியாய் இருப்பதினால், அந்தந்த கதாபாத்திரத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாய் அமுதவன் எழுதிய கரடி பொம்மை, ரவிச்சந்திரன் எழுதிய சுயம்வரம் மிக நிச்சயமாய் பாராட்டப்படவேண்டியவை. வெவ்வேறு காலக் கட்டங்களில், எழுதப் பட்டவையாக இருந்தாலும், இன்னும் தமிழரின் வாழ்வில் மாற்றம் எதுவும் இல்லை. ஏழ்மையும், அடக்குமுறையும் இருக்கும் வரை, நல்ல இலக்கியங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் என்பதற்கு இந்த மாதிரி நூல்களே சாட்சி. அலுவலகம் அருகே, டீ கடையில் கிழிந்த பாவாடை சட்டையோடு இருந்த பெண்ணிடம், சொந்த ஊர் என்ன என்றேன். சேலம் என்றாள்
No comments:
Post a Comment